> 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் – மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை! ~ Kalvikavi - Educational Website - Question Paper

9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் – மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் – மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!


ரெமல் புயலின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.


புயல் எச்சரிக்கை:


தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் தீவிரமாக இருந்து வந்தது. மற்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடைமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் குளுமையான சூழ நிலவியுள்ளது. தற்போது  வங்கக்கடலில் புதிய புயல் உருவாகி உள்ளது.


இந்த புயலுக்கு ‛ரெமல்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவியது. இந்த புயல் காரணமாக சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts