> தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு எப்போது? - வெளியான தகவல்! ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு எப்போது? - வெளியான தகவல்!


தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 2023-24 ஆம் கல்வியாண்டு முடிவடைந்து தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் எப்போது பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து இந்த பகுதியில் காணலாம்

தமிழகத்தில் வழக்கமாக ஜூன் ஒன்று அல்லது இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். கடந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறப்பு தாமதமானது. இரண்டு முறை தள்ளிப் போன நிலையில் ஜூன் 12ஆம் தேதி 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. ஜூன் 14ஆம் தேதி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.


2024-25ஆம் கல்வியாண்டிலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதையொட்டி பள்ளிகள் திறக்க தள்ளிப் போகும். அதுமட்டுமின்றி ஜூன் 4ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. எனவே அதன்பிறகு தான் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு  சென்ற ஆண்டு போல் ஜூன் 10 த்திற்கு பிறகு திறப்பதற்கு வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.

Share:

0 Comments:

Post a Comment