> சட்ட கல்லுாரி சேர்க்கை விண்ணப்ப பதிவு துவக்கம்..! ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

சட்ட கல்லுாரி சேர்க்கை விண்ணப்ப பதிவு துவக்கம்..!

சட்ட கல்லூரி சேர்க்கை விண்ணப்ப பதிவு துவக்கம்..!


தமிழக சட்ட பல்கலைகழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளி, 14 அரசு சட்ட கல்லுாரிகள் உள்பட, 23 சட்ட கல்லுாரிகளில், ஐந்தாண்டு சட்டப்படிப்பு சேர்க்கைக்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையின் கீழ், 14 அரசு சட்ட கல்லுாரிகள் மற்றும், எட்டு தனியார் சட்ட கல்லுாரிகளில், எல்.எல்.பி., ஐந்தாண்டு மற்றும் மூன்றாண்டு படிப்புகள் நடத்தப்படுகின்றன. இவற்றில், 2,043 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

தமிழ்நாடு சட்ட பல்கலையின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும், சீர்மிகு சட்டப்பள்ளியில், எல்.எல்.பி., ஹானர்ஸ் படிப்பில், 624 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். பிளஸ் 2 முடித்த மாணவர்கள், ஐந்தாண்டு படிப்பில் சேர்வதற்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவை, பல்கலையின் துணைவேந்தர் சந்தோஷ் குமார் நேற்று துவக்கி வைத்தார்.

பல்கலையின், www.tndalu.ac.in என்ற இணையதளத்தில், வரும், 31ம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். பிளஸ் 2 தேர்வில் முதல் முயற்சியில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, இதில் விண்ணப்பிக்க முடியும். வயது உச்சவரம்பு கிடையாது. கூடுதல் விபரங்களை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Share:

0 Comments:

Post a Comment