> 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் நகல் வெளியீடு ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் நகல் வெளியீடு

தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கு நேற்று மதியம் நகல்வெளியிடப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் தங்களின் விடைத்தாள் நகல்களை www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் பதி விறக்கம் செய்துகொள்ளலாம்.

மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள், அதே இணையதள பக்கத்தில் விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.


படிவத்தை பூர்த்தி செய்து இருநகல்கள் எடுத்து இன்று (ஜூன் 5)முதல் ஜூன் 10 வரை சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்வு உதவி இயக்குநர் அலுவலகங்களில் ஒப்படைக்கவேண்டும். மயிலாடுதுறை, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள மாணவர்கள், விண்ணப்பங்களை முதன்மைக் கல்வி அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.



விண்ணப்பக் கட்டணமாக மறுமதிப்பீடுக்கு பாடத்துக்கு ரூ.505, மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு மட்டும் ரூ.305-ம், இதர பாடங்களுக்கு ரூ.205-ம் செலுத்தவேண்டும். ஒப்புகைச் சீட்டை தேர்வர்கள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், அதில் உள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவை அறிய முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Share:

0 Comments:

Post a Comment