> அரசுப்பள்ளியில் திடீர் ஆய்வு செய்த கலெக்டர் - கண்டிப்பான குரலில் ஆசிரியர்களுக்கு அறிவுரை! ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

அரசுப்பள்ளியில் திடீர் ஆய்வு செய்த கலெக்டர் - கண்டிப்பான குரலில் ஆசிரியர்களுக்கு அறிவுரை!



திருவள்ளூர் திருத்தணி அரசுப் பள்ளியில் திடீர் ஆய்வு நடத்திய ஆட்சியர் பிரபு சங்கர் மாணவர்களுக்கு புரியாமல் பாடம் நடத்துவதாகக் கூறி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியரை கடிந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


 அப்பொழுது பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களிடம் வேதியியல் குறித்த கேள்விகளை ஆட்சியர் எழுப்பினார். ஆனால் மாணவர்கள் சரியான பதிலளிக்கவில்லை. 


மாணவர்களுக்கு ஆசிரியர் நடத்தும் பாடம் புரியவில்லை என்பதை அறிந்த ஆட்சியர் தனது பாணியில் வேதியல் பாடத்தை நடத்த ஆரம்பித்தார்.


பின்னர் ஆசிரியர்களை அழைத்து பேசிய ஆட்சியர் மாணவர்களுக்கு சரியான புரிதலோடு பாடம் நடத்த வேண்டும் எனவும் வேதியல் பற்றி உங்களுக்கு முழுவதுமாக தெரியுமா என கண்டிப்பான குரலில் பேசினார். 


இது போன்ற ஆசிரியர்களால் தான் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் குறைவதாகவும் கண்டித்தார். இதனால் பள்ளியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Share:

0 Comments:

Post a Comment