> உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத் திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக. ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத் திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.

உங்கள் பகுதியில் நடைபெற்ற  கலைத் திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.

உங்கள் பகுதியில் நடைபெற்ற  கலைத் திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.

விடை:

முன்னுரை:

எங்கள் பகுதியான மதுரையில் கலைத்திருவிழா ஆண்டு தோறும்  தமுக்கம் மைதானத்தில் தமிழ்நாடு அரசு கலைத் துறைப் பிரிவு சார்பில் நடைபெறுகிறது. கலைத்திருவிழா பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

கலைத்திருவிழா சிறப்பம்சங்கள்

உலகத்தார் கண்டு வியக்கத்தக்க கலைகள் பல இருக்கின்றன. அத்தகைய நிகழ்கலைகள் இன்றும் நாட்டுப்புறங்களில் சிறந்த கலைஞர்களால் நிகழ்த்தப்படுகின்றன.பல நாட்டுப்புற கலைகள் மறையும் நிலையில் இருந்தாலும் நமது தமிழக அரசு இக்கலைகளை வளர்க்கும் விதமாக கலைத்திருவிழாவை சிறப்பாக நடத்தி வருகிறது.இதில் 

பொம்மலாட்டம், 

கரகாட்டம்,

காவடியாட்டம்,

மயிலாட்டம்,

பொய்க்கால் குதிரையாட்டம்,

தேவராட்டம் ஆகிய நான் வியக்கத்தக்க கலைகள் இடம் பெற்றது பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.

அரங்குகள் அமைப்பு:

இந்தப் கலைத்திருவிழாவில் பல மாநில கலைஞர்கள், பல வகையான கலைகள் என இருந்ததால் பல மேடைகள் அமைக்கப்பட்டு இந்த நிகழ்கலைகள் நிகழ்த்தப்பட்டன. மேலும் விற்பனை அரங்குகளும் தனியார் மூலம் அமைக்கப்பட்டிருந்தன. மதுரை திருமலை நாயக்கர் மஹால் வடிவமைப்பு பொருட்காட்சியின் முகப்பாக அமைக்கப்பட்டிருந்தது. நகர்ப்புற மக்கள், கிராமச் சூழ்நிலையை உணர்ந்து அனுபவிக்கும் வகையில் சிற்றூர் கலைகள் எனப்படும் சிறப்பு அரங்கு 25 ஆயிரம் சதுர அடியில் உருவாக்கப்பட்டிருந்தது.

கலைநிகழ்ச்சிகள்:

ஒவ்வொரு நாளும் கலைத்திருவிழா நடத்தப்பட்டன. நாங்கள் சென்றிருந்தபோது ஒரிசா, குஜராத், சிக்கிம், மிசோரம், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம், ஜார்கண்ட், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் நாகாலாந்து மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் அம்மாநில மக்களின் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் வகையில் இருந்தது. இது இந்த ஆண்டுதான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகக் கூறினார்கள்.

விளையாட்டு அரங்குகள்

இராட்சச ராட்டினம், குவளை இராட்டினம், மின்சாரத் தொடர்வண்டி, மரணக் கிணறு, மேஜிக்,குதித்து விளையாடும் மெத்தை எனப் பல்வேறு அரங்குகள் இருந்தன. அந்த அரங்குகளுக்குத் தனித்தனியே கட்டணம் வசூலிக்கப்பட்டது. 

நுழைவுக் கட்டணம்: 

கலைத்தருவிழா நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. விடுமுறை நாட்களில் காலை 11 மணிமுதல் இரவு 10 மணி வரையிலும் நடைபெற்றது. நாங்கள் சென்றபோது இதுவரை ஐந்து இலட்சம் பேர் வருகை புரிந்தாகக் கூறினார்கள்.

முடிவுரை

கலைத்திருவிழாவிற்கு வருகை புரிந்தது மூலம் நாங்கள் இதுவரை அறிந்திராத பல வகையான நிகழ்கலைகள் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது. பொழுது போக்கிற்காக நாங்கள் சென்று வந்த நிகழ்வு மிகவும் பயனுள்ளதாகவும் அறிவார்ந்த சிந்தனையை தூண்டுவதாகவும் அமைந்தது.

Share:

0 Comments:

Post a Comment