> நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் - கட்டுரை ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் - கட்டுரை

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் - கட்டுரை 

8th tamil unit 1 Tamil essay - Naan virumbum kavingar - katturai also Read more Follow our website. 

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் - கட்டுரை

கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக

முன்னுரை – நோய் வரக் காரணங்கள் – நோய் தீர்க்கும் வழிமுறைகள் – வருமுன் காத்தல் – உணவும் மருந்தும் – உடற்பயிற்சியின் தேவை – முடிவுரை

முன்னுரை :

  • நம்மிடம் என்னதான் கல்வி, செல்வம் முதலியவை இருந்தாலும் உடல் நலத்தோடு நீண்ட ஆயுளுடன் வாழ்வது முக்கியமாகும். நோயற்ற வாழ்வினை வாழ நாம் செய்ய வேண்டியனவற்றைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

நோய் வரக் காரணங்கள் :

  • இன்றைய வாழ்க்கைச் சூழலில் ஓய்வின்மை, காலம் தவறிய உணவு. உணவுப் பழக்கவழக்க மாற்றம் உள்ளிட்டவையே பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்குக் காரணமாகும். துரித உணவுக் கலாச்சாரத்தில் மூழ்கியதே பல நோய்கள் வருவதற்குக் காரணம்.

நோய் தீர்க்கும் வழிமுறைகள் :

  • நாம் உண்ணும் உணவின் அளவை அறிந்து உண்ணுவது, சரியான உடற்பயிற்சி – மேற்கொள்வது, நம் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் போன்றவை நோயைத் தீர்க்கும் வழிமுறைகள் ஆகும்.

வருமுன் காத்தல் :

  • பருவநிலைகள் மாறும்போது அதற்கேற்ற உணவுகளை உண்ணுதல் அவசியம். கோடைக்காலத்தில் பழச்சாறுகளை அருந்துதல், மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்கவும், காய்ச்சல் வராமல் இருக்கவும் நம் தமிழ் மருத்துவ முறைகளை அறிந்து அவற்றை பின்பற்றுதல் வேண்டும்.

உணவும் மருந்தும் :

  • உணவு வகைகளே நமது உடல் நலத்திற்கு அடிப்படை என்று கூறினால் அது மிகையாகாது. 
  • மதிய உணவில் காய்கறிகள் கீரைகள் ஆகியவற்றை அதிக அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அரிசி உணவை அளவாக உண்ண வேண்டும். 

உடற்பயிற்சியின் தேவை :

  • நாம் நோயின்றி வாழ உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. ‘ஓடி விளையாடு பாப்பா… நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா’ என்று பாடிய பாரதியார், உடற்பயிற்சியைச் சிறுவயது முதலே அனைவரும் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். இதனைக் கவிமணி,

“காலை மாலை உலாவிநிதம்

காற்று வாங்கி வருவோரின்

காலைத் தொட்டுக் கும்பிட்டுக்

காலன் ஓடிப் போவனே!

என்கிறார்.

முடிவுரை :

  • நோயற்ற வாழ்விற்குச் சுகாதாரம் அவசியம். ‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்ற ஔவையின் வாக்குப்படி நமக்குக் கிடைத்த இவ்வுடலை நோயின்றி வைத்திருப்பது நம் கடமையாகும்.

Share:

0 Comments:

Post a Comment