> School Leave | காலாண்டு தேர்வு விடுமுறையிலும் சிறப்பு வகுப்புகளா... பள்ளிக்கல்வித் துறை அதிரடி உத்தரவு ~ Kalvikavi - Educational Website - Question Paper

School Leave | காலாண்டு தேர்வு விடுமுறையிலும் சிறப்பு வகுப்புகளா... பள்ளிக்கல்வித் துறை அதிரடி உத்தரவு

காலாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களில் சில பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.



தமிழகத்தில் பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு தற்போது நடந்து வருகிறது. பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்புகளுக்கு செப்.19-ம் தேதி தேர்வு தொடங்கிய நிலையில், 6 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு செப்.20-ம் தேதி காலாண்டு தேர்வு தொடங்கியது. 


இன்று 27-ம் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) காலாண்டு தேர்வை முடிக்கும் வகையில், அட்டவணை தயாரிக்கப்பட்டு தேர்வு நடைபெறுகிறதுதேர்வு முடிந்ததும், நாளை 28-ம் தேதி (சனிக்கிழமை) முதல் 2-ம் தேதி (புதன்கிழமை) வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்படுவதாகவும், காலாண்டு விடுமுறைக்குப் பின்னர், வருகிற 3-ம் தேதி (வியாழக்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவிருப்பதாகவும் பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.இந்நிலையில், 


விடுமுறை நாட்களை நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன. வழக்கமாக ஒவ்வொரு வருடமும் காலாண்டுத் தேர்வு விடுமுறை 9 நாட்கள் விடப்படும் நிலையில், 


இம்முறை 5 நாட்களே விடுமுறை அறிவித்ததை எதிர்த்து கோரிக்கை விடுத்திருந்தனர்.கோரிக்கைக்கு ஏற்ப பள்ளி காலாண்டு விடுமுறையை நீட்டிப்பது தொடர்பாகத் துறை சார்ந்து பேசி முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்திருந்தார். இதனால் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் விடுமுறை நீட்டிப்பு குறித்து காத்திருந்தனர்.


அதன்படி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சந்தோஷம் தரும் வகையில், மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை அக்டோபர் 6-ம் தேதி வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டது. ஆசிரியர்கள் கோரிக்கைக்கு ஏற்ப 9 நாட்கள் விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது. விடுமுறை முடிந்து அக்டோபர் 7-ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, காலாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களின்போது பள்ளிகளில் எந்த விதமான சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.


 அதன்படி, "காலாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது. மேலும், பள்ளி திறப்பதற்கு முன்பு பள்ளி வளாகத்தினை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். பள்ளி திறக்கும் நாளன்றே அனைத்து மாணவர்களுக்கும் திருத்திய விடைத்தாள்கள் அளிக்கப்பட வேண்டும்" என்றும் பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts