> 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை நாளை - (அக். 14) அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிடுகிறார்! ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை நாளை - (அக். 14) அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிடுகிறார்!

பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை நாளை மறுநாள்(அக். 14) அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிடுகிறார்.

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடைபெறும்.

இந்நிலையில் நடப்பு(2024-25) கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அக். 14 ஆம் தேதி வெளியிட உள்ளார்.

இதுபற்றி பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பில், 'தமிழ்நாடு முதல்வர், துணை முதல்வர் ஆகியோருடன் மேற்கொண்ட ஆலோசனையின்பேரிலும், அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்கவும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கோயம்புத்தூரில் வருகிற திங்கள்கிழமை (14.10.2024) காலை 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட உள்ளார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Posts:

0 Comments:

Post a Comment