அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் திறனைக் கண்டறிவதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத்தேர்வு, 04.08.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற்றது. 1,03,756 மாணவ மாணவியர்கள் இத்தேர்வெழுதினர்.
இத்தேர்வில் 1000 மாணாக்கர்கள் (500 மாணவர்கள் + 500 மாணவியர்கள்) தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு வரை மாதம் ரூ.1000/- வீதம் ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும் உதவித்தொகையாக ரூ.10,000/- வழங்கப்படும்.
இத்தேர்வின் முடிவுகள் 06.11.2024 அன்று வெளியிடப்படவுள்ளது. எனவே இத்தேர்வெழுதிய மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் RESULTS என்ற தலைப்பில் @ TAMIL NADU CHIEF MINISTER TALENT SEARCH EXAMINATION Results என்ற பக்கத்தில் மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம். மேலும் ஊக்கத்தொகைக்கான தெரிவுப்பட்டியல் ② other Examination → TAMIL NADU CHIEF MINISTER TALENT SEARCH EXAMINATION என்ற பக்கத்தில் வெளியிடப்படும் என்று
தெரிவிக்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment