பாடப்பகுதிகளில் சிக்கலான தலைப்புகளை எளிமையாகவும், சுவாரசியமாகவும், மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும், விளக்கும் திறன் கொண்ட ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பாக, கேமராவின் முன் காணொளி நிகழ்த்துவதில் முன் அனுபவம் இருப்பது கூடுதல் தகுதியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
புதிய அணுகுமுறைகளை கற்றுக்கொள்ளும் ஆர்வமும், அதனை கற்றல், கற்பித்தலில் செயல்படுத்தும் திறனும் உள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம், என, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், விருப்பமுள்ள ஆசிரியர்கள் சிறிய புதுமையான, கற்றல், கற்பித்தல் வீடியோக்களை அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் கூறுகையில், 'தற்போது, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உயர்தர ஆய்வகங்கள், ஆசிரியர்களுக்கு தொழில்நுட்ப உபகரணங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
அடுத்தடுத்த கல்வியாண்டில், இணையம் வாயிலாக பாடங்களுக்கு காணொளியில் மாணவர்களுக்கு எளிமையான விளக்கம் அளிப்பதற்கு இவ்வாறு தயாரிக்கப்படுகிறது.
கல்வி தொலைகாட்சியிலும் இந்த காணொளிகள் ஒளிப்பரப்படும்' என்றனர்.
Vasanth
ردحذف