10th Tamil - மேகம்- நாகூர்ரூமி| Megam
நுழையும் முன்
மேகம் நம் கூரைையாக இருக்கின்றது. வானத்திற்கு அழகுசெய்வது மேகம். பாாரதி அந்திவாானத்து மேகத்தைை அழகுணர்ச்சியுடன் வருணிக்கிறார்.
யாப்பைையே மறந்துவிடுகிறாார். மேகத்தைைத் தூதுப்பொருளாகக் கவிஞர்கள் கொண்டாடுகின்றனர். ‘மேகசந்தேசம்’ என்று காளிதாசன் காவியமே இயற்றினார். மேகம் நம்மை வெயிலிலிருந்து பாதுகாக்கிறது; நமக்கு மழைதருகிறது; நமக்கு அழகுக்காட்சி வழங்கி வியக்கவைைக்கிறது. மேகத்தைப் பற்றிய கவிப்பார்வை ஒன்றைக் காணலாம்.
பாடல்
மேகங்கள் மிகவும் மென்மைையானவ
இதழ் முகிழ்க்கும் மழலையின்
கன்னம் போல
அல்லது காதுக் குருத்து போல
எனினும் மேகங்கள்
துணிச்சலானவ
முதுகைக் கொடுத்து
சூரியனை மறைைக்கும்போது
மேகங்கள் மிகவும்
கருணையுள்ளவை
தாகங்கள் தீர்க்கும்போதெ
மேகங்கள் மிகவும்
அழகானவை
மலை முகடுகளில்
நடை பயிலும்போது
மேகங்கள் ரொம்ப அற்புதமானவை
தண்ணீரும் இல்லாமல்
தன்னுயிரும் போகாமல்
வான் வெளியில்
மிதந்து செல்லும்போது
மேகங்கள் மிகவும் மென்மைையானவ
- நாகூர்ரூமி
நூல் வெளி
முகம்மது ரஃபி என்னும் இயற்பெயரைைக் கொண்ட நாகூர்ரூமி தஞ்சைை மாாவட்டத்தில் பிறந்தவர்;
இவர் எண்பதுகளில் கணையாழி இதழில் எழுதத் தொடங்கியவர். கவிதை, குறுநாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் இவர் தொடர்ந்து இயங்கி வருபவர்; சுயமுன்னேற்றம் பற்றி எழுதியும் பேசியும் வருபவர். இவர் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது நதியின் கால்கள், ஏழாாவது சுவை, சொல்லாத சொல் ஆகிய மூன்று கவிதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. மொழிபெயர்ப்புக் கவிதைைகள், சிறுகதைைத்தொகுதிகள் ஆகியவற்றுடன் 'கப்பலுக்குப் போன மச்சான்' என்னும் நாவலைையும் இவர் படைைத்துள்ளார்.
சிறுவினா
- மென்மைையான மேகங்கள், துணிச்சலும் கருணையும் கொண்டு வானில் செய்யும் நிகழ்வுகளை எழுதுக.
*மென்மைையான மேகங்கள் துணிச்சலாக தமது முதுகைக் கொடுத்து சூரியனை மறைக்கின்றன.
*கருணையுடன் தாகம் தீர்க்கின்றன.
*தாகம் தீர்க்கும் போதே தண்ணீரும் இல்லாமல் தன்னுயிரும் போகாமல் வான் வெளியில் மிதந்து செல்கின்றன.
0 Comments:
Post a Comment